Udanprape others
www.garudabazaar.com

"அக்‌ஷரா வெளியேறுவாங்களா?".. பாவனியிடமே கேட்டுவிட்ட அபிஷேக், நிரூப்.. பாவனி சொன்ன ‘தெறி’ பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இப்போது காயின் டாஸ்க் மூலமாக களைகட்டி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில், போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

pavani answer for akshara nomination questioned by abishek niroop

இதனிடையே 17-வது நாளுக்கான அன்சீன் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இதில் நிரூப் மற்றும் அபிஷேக் இருவரும் பாவனியிடம் பேச்சு கொடுக்கின்றனர். அப்போது நாமினேஷன் குறித்துப் பேசும் பொழுது அக்‌ஷராவின் நாமினேஷன் குறித்த பேச்சுக்கள் எழுகின்றன. அப்போது பாவனியின் கருத்தை அபிஷேக் கேட்க, நிரூப்பும் அதை வழிமொழிய, பாவனி அக்‌ஷராவை பற்றி சொல்வதற்கு கொஞ்சம் யோசிப்பது போல் தெரிகிறது.

pavani answer for akshara nomination questioned by abishek niroop

இருப்பினும் அக்‌ஷராவுக்கு வெளியில் ஒரு நல்ல ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றும் அதே போல் வீட்டுக்குள் அவருக்கு நல்ல சப்போர்ட் இருக்கிறது என்றும் பாவனி கூறிவிடுகிறார். அதேசமயம் அபிஷேக்கும் பிரியங்காவும் ஏற்கனவே ராஜூவை அக்‌ஷராவுக்கு உதவி செய்த காயின் எடுத்து வைத்துக் கொண்டதாக டார்கெட் செய்தனர்.

pavani answer for akshara nomination questioned by abishek niroop

ராஜூ முன்னதாக அக்‌ஷரா கதை சொல்லும்போது லைக் போட்டு விட்டது தான் இந்த பிரச்சனை தொடங்கிய புள்ளி. ஆனால் அதன் பிறகு ராஜூவே அக்‌ஷராவிடம் சென்று லைக் போட்டதற்கு காரணம் அக்‌ஷரா மனசு கஷ்டப்பட விடக்கூடாது என்பதற்காக தான் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

pavani answer for akshara nomination questioned by abishek niroop

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை ராஜூ, அக்‌ஷராவுக்கு அந்த லைக் போட்டதை தவிர்த்து, பெரிதாக சப்போர்ட் பண்ணுவதாக தெரியவில்லை என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாவனி, அக்‌ஷராவை பற்றிய இப்படி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். ஆனாலும் பாவனிக்கும் அக்‌ஷராவுக்கும், பிக்பாஸ் வீட்டுக்குள் உரசல் தொடங்கியிருக்கிறது.

pavani answer for akshara nomination questioned by abishek niroop

அதன்படி, “உங்களுக்கு என்னுடன் எதாவது பிரச்சனை இருந்தால், முகத்துக்கு நேரே பேசுங்கள்.. என்னைப்பற்றி பின்புறமாக பேசுவது.. நாமினேஷன் பண்ண சொல்லி என் பெயரை எழுதுவது போன்றவையெல்லாம் வேண்டாம்!” என்று முகத்துக்கு நேரே அக்‌ஷராவிடம் பாவனி கூற, அதற்கு அக்‌ஷரா, “எனக்கு உன்னிடம் பேச வேண்டும் என்று இல்லை. உன்னைப்பற்றி பேச வேண்டியதும் இல்லை. நான் அப்படி செய்யவில்லை. நான் பேசப் போவதுமில்லை!” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்

pavani answer for akshara nomination questioned by abishek niroop

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5 will find this news story useful.