பிரபல பாலிவுட் நடிகை வசித்த வீட்டை வாங்க தயங்கும் மக்கள்.. பரபரப்பை உண்டு பண்ணும் காரணம்
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த பிரபல பாலிவுட் நடிகை ஒருவரின் வீட்டை வாங்க பலரும் தயக்கம் காட்டி வரும் நிலையில், இதற்கான காரணம் அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Also Read | AK61 படத்தின் FIRST LOOK போஸ்டருடன் வெளியான மாஸ் டைட்டில்..நடிகர் அஜித்தோட லுக் தீய்யா இருக்கு!
கடந்த 1973 ஆம் ஆண்டு, ஹிந்தியில் வெளியான சரித்ரா என்னும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பர்வீன் பாபி. தான் நடிக்க வந்த காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்த பர்வீன், தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.
பல ஆண்டுகள் ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பர்வீன் பாபி, தனது 51 ஆவது வயதில் யாரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கடுமையான ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்ட பர்வீன் பாபி, பல உறுப்புகளின் செயலிழப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மும்பையின் ஜூஹு பகுதியில் அமைந்துள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த நடிகை பர்வீன், அங்கே இறந்து சுமார் 4 நாட்கள் கழிந்த பிறகு தான் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபல நடிகையின் எதிர்பாராத மரணம், அந்த சமயத்தில் பாலிவுட் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டு பண்ணி இருந்தது. இந்நிலையில், நடிகை பர்வீன் பாபி தங்கி இருந்த அபார்ட்மெண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. கடற்கரை வியூ தெரியும் வகையில் இந்த அபார்ட்மெண்ட் உள்ள நிலையில், இதனை வாங்கவே யாரும் முன் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த பிளாட்டை பார்க்க வருபவர்கள், முதலில் பர்வீன் பாபியின் பிளாட் என்பது தெரியாமல் பார்க்க வருகிறார்கள் என்றும், உண்மை தெரிந்த பின் வித்தியாசமாக உணர்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தான் தங்கி இருந்த வீட்டில் பர்வீன் இயற்கை மரணம் அடைந்த போதிலும் வீட்டில் ஏதோ இருப்பது போல அங்கே வருபவர்களுக்கு தோன்றுவது விசித்திரமாக உள்ளது என தரகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு பர்வீன் பாபி குடியிருப்பில் வாடகைதாரர் ஒருவர் இருந்ததாகவும், ஆனால் அவர் அந்த இடத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தியதன் பெயரில் அங்கிருந்து அந்த நபர் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பர்வீன் பாபி வசித்து வந்த பிளாட், வாடகை மற்றும் விற்பனைக்கும் உள்ள நிலையில், அவர் அங்கேயே இறந்த ஒரே காரணத்துக்காக பலரும் வாங்க தயக்கம் காட்டும் தகவல், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
Also Read | இந்தியன் 2 படத்திற்காக களமிறங்கிய காஜல்.. வைரலாகும் குதிரை சவாரி வீடியோ!!