இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

தன்னை கொலை செய்ய முயன்றதாக பார்த்திபன் மீது அவரது உதவியாளர் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.
அதில், 'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி!' என்று குறிப்பிட்டுள்ளார்.