ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இந்த புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சர்வம் தாளமயம்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா' . இந்த படத்தில் பிரபல நடிகர் பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல  நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

G.V.Prakashkumar and Parthiepan's Kuppathu Raja directed by Baba Baskar release date announced

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ் ஃபோகஸ் புரொடக்ஷன் சார்பில் சரவணன் மற்றும் சிராஜ் தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய எடிட்டிங் பணிகளை பிரவீன் கே.எல் மேற்கொள்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் பூனம் பாஜ்வா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.