’…குடியுரிமை சட்டம் ரத்தா? ரத்தமா?’ - பார்த்திபன் குழப்பம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 26, 2019 10:37 AM
1989ம் ஆண்டு புதிய பறவை படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தமிழ்சினிமாவில் தடம் பதித்தவர் பார்த்திபன். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் வந்த அவர் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டார்.
இந்த ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து பார்த்திபன் டிவிட்டரில் வரும் 2020 புத்தாண்டு பற்றி பதிவிட்டுள்ளார்: 2020? இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா? என்ன சினிமா செய்யலாம்? ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு? குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா? என்று கேட்டுள்ளார்.
2020 ?
இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா?
என்ன சினிமா செய்யலாம்?
ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு?
குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா? pic.twitter.com/WjIe7r0pEs
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 26, 2019