பல்லுப்படாம பாத்துக்க படத்தின் டீசர் காட்சி - கபாலி வசனம்தான்...ஆனா இது வேற ரகம்! 100% Fun Guarantee.
முகப்பு > சினிமா செய்திகள்பல்லுப்படாம பாத்துக்க படத்தின் டீசர் காட்சி வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

டெம்பிள் மங்கீஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் விஜய் வரதராஜ். ஜிவி.பிரகாஷின் எனக்கு இன்னொரு பேரு இருக்கு படத்தில் இவரது காமெடி கவனிக்க வைத்தது. இந்த நிலையில் விஜய் வரதராஜ் தற்போது பல்லுப்படாம பாத்துக்க என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
பல்லுப்படாம பாத்துக்க படத்தின் டீசர் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. சாம்பியை மையமாக வைத்து காமெடி கலந்த அடல்ட் ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், ஷாரா, ஜகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மார்ச் 13 அன்று இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
— Dinesh (@Dineshvcravi) February 22, 2020
பல்லுப்படாம பாத்துக்க படத்தின் டீசர் காட்சி - கபாலி வசனம்தான்...ஆனா இது வேற ரகம்! 100% FUN GUARANTEE. வீடியோ