www.garudabazaar.com

அடடே.. இந்த 3 ஆஸ்கர் விருதுகளும் வரலாற்றில் முதல் முறை.. நெகிழும் உலக சினிமா ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடக்கிறது.

Oscars2021 Academy Awards these 3 awards made history

இதில் சிறந்த படத்துக்கான விருதினை Nomadland படம் பெற்றது. இதேபோல், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இதே நோமேட்லாண்ட் (Nomadland)படத்துக்காக, இப்படத்தின் சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் (Chloé Zhao) பெற்றார்.

93 வருட ஆஸ்கர் வரலாற்றில் இவர் தான் சிறந்த இயக்குநருக்கான விருதினை பெறும் 2வது பெண்மணி. அதிலும் கலர் படத்தை இயக்கியதற்காக விருது பெற்ற முதல் இயக்குநர் இவர்தான். முன்னதாக 2010-ஆம் ஆண்டு ‘தி ஹர்ட் லாக்கர்’ (The Hurt Locker) படத்துக்காக  கேத்ரின் பிக்லோ (Kathryn Bigelow) எனும் பெண்மணி ஆஸ்கர் விருதினைப் பெற்றிருந்தார்.

இதேபோல் Ma Rainey's Black Bottom படத்துக்காக சிறந்த மேக் அப் மற்றும் ஹேட் ஸ்டைலிங் விருதினை செர்ஜியோ லோப்ஸ்-ரிவேரா (Sergio Lopez-Rivera), மியா நீல் (Mia Neal) மற்றும் ஜாமிகா வில்சன் (Jamika Wilson) பெற்றுள்ளனர். இவர்களுள் மியா நீல் மற்றும் ஜாமிகா வில்சன் ஆகியோர் இந்த கேட்டகரியில் வரலாற்றில் முதல் முறையாக இந்த விருதுகளை பெறும் கருப்பின பெண்கள் என உலக சினிமா ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

ALSO READ: களைகட்டும் 93வது ஆஸ்கர் விருதுகள்.. சிறந்த இயக்குநர் இவர் தான்.. Tenet-க்கு என்ன விருது தெரியுமா?

மேலும் செய்திகள்

Oscars2021 Academy Awards these 3 awards made history

People looking for online information on AcademyAwards, Oscars, Oscars2021 will find this news story useful.