Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட நடிகைக்கு திருமணம்! .. களைகட்டிய மெஹந்தி விழா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நிரஞ்சனி அகத்தியனுக்கு நடந்த மெஹந்தி விழா சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Niranjani mehandi viral video நிரஞ்சனி அகத்தியன்

இயக்குநர் அகத்தியனுக்கு 3 மகள்கள். இவர்கள் மூவருமே பிரபலமானவர்கள். இவர்களுள் மூத்த மகள் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இன்னொரு மகள் விஜயலட்சுமி சென்னை-28 படத்திலும் பிக்பாஸிலும் புகழ்பெற்றவர். இதேபோல் இளைய மகளும் நடிகையுமான நிரஞ்சனி தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்த நிரஞ்சனிக்கு தான் தற்போது திருமண வேலைகள் மும்முரமாக நடந்துள்ளன. அதன் ஒரு அங்கமாக அவருக்கு மெஹந்தி போடும் நிகழ்வு நடந்தது. இதில் தான் நிரஞ்சனியின் சகோதரிகளும் தோழிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

நிரஞ்சனி அகத்தியன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்யவுள்ளார் என்பதும் இவர்களின் திருமண பத்திரிகையை கனியின் கணவரும் இயக்குநருமான திரு அண்மையில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIDEO: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட நடிகைக்கு திருமணம்! .. களைகட்டிய மெஹந்தி விழா!! வீடியோ

Niranjani mehandi viral video நிரஞ்சனி அகத்தியன்

People looking for online information on Desingh Periyasamy, Kannum Kannum Kollaiyadithaal, Niranjani Agathiyan will find this news story useful.