RRR Others USA
www.garudabazaar.com

ப்ரோமோவே தாறுமாறு! பிரபல சேனலில் களைகட்ட போகும் ‘புதிய’ சமையல் நிகழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 16, பிப்ரவரி, 2022: டெலிவிஷன் நிகழ்ச்சிகளை மக்கள் பெரிதும் விரும்பி பார்க்கின்றனர். டெலிவிஷனில், ஆடல் பாடல் மற்றும், தொடர் சீரியல்கள் ஆகிய அனைத்துக்கும் பெருவாரியான மக்களிடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு எப்போதும் இருக்கிறது.

new cooking programme in popular tv channel viral promo

சமையல் நிகழ்ச்சிகளும் சின்னத்திரையும்..

குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு சின்னத்திரை எப்போதும் முன்னுரிமை கொடுத்து வரும். அந்த வகையில் சமையல் நிகழ்ச்சி என்பது சின்னத்திரைகளில் முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது முந்தைய காலகட்டங்களில் போல் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதை விடவும், அவற்றிலும் மசாலாக்களை கொணர்ந்து முழுக்க முழுக்க பொழுதுபோக்கு மற்றும் காமெடி கலந்து கொடுப்பதில் நிகழ்ச்சிதாரர்களும்,  அதை அவ்வாறு பார்ப்பதற்கே ரசிகர்களும் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

new cooking programme in popular tv channel viral promo

Also Read:நாயகனை 'அலேக்கா' தூக்கிகிட்டு கோயில் படி ஏறினாரா ‘முத்தழகு’ நாயகி?  உண்மையில நடந்தது இதான்  .. வைரல் ஆகும் BTS Video

குக் வித் கோமாளி, மாஸ்டர் செஃப்

அந்த வகையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி, இந்த சமையல் நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறாக புதுமையான அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதுவரை மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் சீரியசாக சமைக்கும் போட்டியாளர்கள், அவர்கள் அருகே நின்று காமெடி பண்ணும் கோமாளிகள் என்று இரண்டு விதமான ஆளுமைகள், இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்கின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முழுநேரமும் அனைவரையும் என்கேஜ் பண்ணும் இப்படியான சமையல் நிகழ்ச்சிகளை பல டெலிவிஷன்களும் நடத்தி வருகின்றன. அண்மையில் சன் டி.வியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய மாறுபட்ட சமையல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாஸ்டர் செஃப் என்கிற பெயரில் அனைவரிடத்திலும் பிரபலமானது. இதேபோல் தற்போது கலைஞர் டிவியில் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.

‘குக்கிங் கில்லாடிஸ்’..

இந்த நிகழ்ச்சியின் அறிமுக ப்ரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் ஆங்கராக கலந்துகொள்ளும் பெண்ணின் கணவர், தன் மனைவிக்கு சமையலை பற்றி எதுவுமே தெரியாதே? என அரக்க பறக்க சமையல் நிகழ்ச்சி நடக்கும் செட்டுக்கு ஓடிவர, அங்கு இவரை வைத்து சமையல் எப்படி பண்ணுவது? பேசாமல் ஃபன் பண்ணுவோம் என்கிறார்கள். 

‘குக்கிங் கில்லாடிஸ்’ என்கிற தலைப்பில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 20-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை புதுமையான முறையில் பொழுதுபோக்கு கலந்து மிகவும் காமெடியாக எடுத்துச்செல்ல வருகிறார் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர் காயத்ரி யுவராஜ்.

ஆங்கராக சீரியல் நடிகை..

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இவர் தென்றல், மெல்ல திறந்தது கதவு, அரண்மனைக்கிளி ஆகிய சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பேசிய அவர், இந்த நிகழ்ச்சியை முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட் நோக்கில் மிகவும் ஃபன்னாக, தான் தொகுத்து வழங்கவிருப்பதாகவும், இனி தன்னை ஆங்கராக பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Also Read: இவருக்கு இவ்ளோ பெரிய மகனா? தங்கர் பச்சான் மகன் ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் செம அப்டேட்..

 

தொடர்புடைய இணைப்புகள்

new cooking programme in popular tv channel viral promo

People looking for online information on Cooking Show, Kalaignar TV will find this news story useful.