RRR Others USA
www.garudabazaar.com

வெளியான ‘இனி தமிழில்’ ரகசியம்! கனா காணும் காலங்களை அடுத்து இப்படி ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் ரசிகர்களிடையே என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளை கொடுப்பதில் முதன்மையான சேட்டிலைட் சேனலாக விளங்கும் விஜய் டிவி தற்போது புதிய பரிமாணம் எடுத்திருக்கிறது.

new biggboss in this format disney plus hotstar tamil deets

முன்னதாக விஜய் டிவி இனி தமிழில் என்று பதிவிட்டு, அடுத்த நாள் காலை 10 மணி வரை காத்திருங்கள் என்று சொல்லி, தம்முடைய தளங்களில் ஒரு ப்ரோமோவை வெளியிட்டு இருந்தது. பலரும் இது குறித்து பேசி வந்தனர். இந்த ப்ரோமோவில் இனி தமிழில் என்கிற வார்த்தைகள் வர, பின்னணியில் கனா காணும் காலங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளின் பின்னணி இசை ஒலிபரப்பாகிறது.

new biggboss in this format disney plus hotstar tamil deets

இதனால் ரசிகர்கள் கனா காணும் காலங்கள் தொடர் மீண்டும் வரப்போகிறதா? என்று பேசி வந்தனர். அதேசமயம் இனி தமிழில் என்று விஜய்டிவி பதிவிட்டுள்ளதற்கான காரணம் என்ன என்றும் பேசி வந்தனர். இந்தநிலையில் அடுத்த நாள் காலை 10 மணியும் வந்தது. அதன்படி கனா காணும் காலங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பல பொன்னான நிகழ்ச்சிகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வரவிருக்கின்றன.

new biggboss in this format disney plus hotstar tamil deets

இதற்காக தமிழுக்கென்றே டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரத்தியேகமாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதனை விஜய் டிவி தற்போது அறிவித்திருக்கிறது. இதில் இடம் பெறக்கூடிய நிகழ்ச்சிகளை அடுத்தடுத்த ப்ரோமோக்களாக வெளியிட்டிருக்கிறது. அதன்படி கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.  இந்த ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது. அதில் நம் பள்ளிப் பருவத்தில் அழகான தருணங்களை நினைவூட்டி மகிழ்விக்க வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே வேற்று மொழிகளில் சக்கைபோடு போட்ட பிக்பாஸ் ஓடிடி  நிகழ்ச்சி தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

new biggboss in this format disney plus hotstar tamil deets

இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் மற்றும் இந்நாள் போட்டியாளர்களை கொண்டு, 60 நாட்கள் நடக்க கூடிய புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் மட்டும் பிரத்தியேகமாக ஒளிபரப்பாக இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. தற்போது விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஏறக்குறைய 85 நாட்கள் நெருங்கிவிட்ட இந்த நிகழ்ச்சி முடிய, இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக போவது யார்? அதாவது டைட்டில் வின்னர் ஆக வெற்றிவாகை சூட போவது யார்? என்கிற பரபரப்பான ஆர்வம் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

Also Read: முட்டை உடைக்கும் Task-ல் ராஜூவுடன் எழுந்த மோதல்! அழுதுகொண்டே  walk out செய்த பாவனி!

தொடர்புடைய இணைப்புகள்

new biggboss in this format disney plus hotstar tamil deets

People looking for online information on BiggBoss15, BiggBoss5, BiggBossOTT, Biggbosstamil, BiggBossTamil5, Disney plus hotstar tamil, DisneyPlusHotstar, KanaaKaanumKaalangal, KanaKanumKalangal, New biggboss, Vijaytv will find this news story useful.