பாலாஜிக்கு ஆரி மேல 'பேக்கேஜ்' எல்லாம் இல்ல... கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொஞ்ச காலம் அமைதியாக இருந்த பாலாஜி நேற்று பழைய பன்னீர்செல்வமாக திரும்பி விட்டார். இதைப்பார்த்து அவரது ஆர்மியினர் புதிய உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். பிரீஸ் டாஸ்க் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆரி, ஆஜீத் மற்றும் கேப்ரியலா குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தனர். போட்டியாளர்கள் அனைவரும் அவர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

Netizens not liked Balaji's speech about Aari Arjunan

இதற்கிடையில் பாலாஜி தன்னுடைய சிஷ்யன் ஆஜீத்துடன் அமர்ந்து பிக்பாஸ் டைட்டில் குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ரியோ, சோம் போன்ற ஒருத்தர் கப் ஜெயிக்க கூடாது. நான் ஜெயிச்சா கண்டிப்பா அது டிரெண்ட் செட்டரா இருக்கும் என்றார். பின்னர் நிகழ்ச்சியின் முடிவில் பாலாஜி, ஷிவானியுடன் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகின. அதில் ஆரி கப் ஜெயிச்சா நான் கண்டிப்பா வருத்தப்படுவேன். இதை நான் கமல் சார்கிட்ட கூட சொல்வேன் என்றார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் என்னப்பா இப்படி மாத்தி,மாத்தி பேசுறாரு என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் பாலாஜிக்கு, ஆரி மேல பேக்கேஜ் எல்லாம் இல்ல. ஒரு துணிக்கடையே வச்சு இருக்காரு. என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் மீண்டும் இருவருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens not liked Balaji's speech about Aari Arjunan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.