RRR Others USA
www.garudabazaar.com

யாருமே கண்டுபிடிக்கல.. லோக்கல் ரயிலில் பயணம் செய்த பிரபல நடிகர்.. வைரலாகும் வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக், தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு லோக்கல் ரயிலில் பயணம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Nawazuddin Siddiqui travels secretly in Mumbai local train

காத்துவாக்குல ரெண்டு காதல்.. Two Two பாட்டுல இதான் சமந்தா - நயன்தாரா கெட்டப்பா? வைரல் PHOTOS

நவாஸுதீன் சித்திக்

பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக், 1999-ம் ஆண்டு "சரிபாரோஷ்" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். தன்னுடைய அபாரமான திரை மொழியின் காரணமாக பல லட்சக்கணக்கான ரசிகர்ளையும் இவர் பெற்றிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நவாஸுதீன் சித்திக். அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்த இவருடைய கேரக்டர் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Nawazuddin Siddiqui travels secretly in Mumbai local train

இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலுக்கு செல்லவேண்டிய சூழ்நிலையில் இருந்திருக்கிறார். மும்பையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால் உள்ளூர் டிரைனில் செல்ல முடிவெடுத்திருக்கிறார் சித்திக்.

ரகசிய பயணம்

இதனை அடுத்து முகக்கவசம், கண்ணாடி ஆகியவை அணிந்து மும்பையின் லோக்கல் ரயில் நிலையத்திற்கு சென்றிருக்கிறார் இவர். சிவப்பு டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பேண்டை அணிந்திருந்த சித்திக்கை ரயில் நிலையத்தில் இருந்த எவரும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ரயிலில் ஏறி பயணம் செய்து நேர்காணல் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றிருக்கிறார் சித்திக்.

Nawazuddin Siddiqui travels secretly in Mumbai local train

யாரும் கண்டுபிடிக்கவில்லை

தான் லோக்கல் ரயிலில் ஏறி இந்த நேர்காணலுக்கு வந்ததாக பேட்டியில் சித்திக் தெரிவிக்க, அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். "உங்களை யாரும் கவனிக்கவில்லையா?" என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, "மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிந்திருப்பதால் எளிதாக பயணம் செய்ய முடிகிறது" என பதில் அளித்திருக்கிறார் நவாஸுதீன் சித்திக்.

Nawazuddin Siddiqui travels secretly in Mumbai local train

மாறுவேடத்தில் மும்பையின் லோக்கல் ரயிலில் பாலிவுட் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

காஜல் அகர்வாலின் கர்ப்ப கால வேதனைகள்... உதவிய உற்ற நண்பன்! முக்கிய தகவல்கள்

 

தொடர்புடைய இணைப்புகள்

Nawazuddin Siddiqui travels secretly in Mumbai local train

People looking for online information on நவாஸுதீன் சித்திக், Mumbai local train, Nawazuddin Siddiqui, Travel will find this news story useful.