www.garudabazaar.com

ஹிப் ஹாப் தமிழா இசையில் உளவாளியாக நாகார்ஜூனா மகன் அகில் நடிக்கும் ஏஜெண்ட்.. ரிலீஸ் எப்போ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்தியா திரைப்படம் ‘ஏஜெண்ட்’,  2023 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது .

Nagarjuna Son akhil akkineni Agent release update

Also Read | Bigg boss 6 tamil : தடுத்து நின்ற தனலட்சுமி.. இடித்து தள்ளி உள்ளே போன அசீம்.. Doll Task-ல் அடுத்த சம்பவம்.!

இளம்  நடிகர் அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டி கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளனர். அதன்படி ஏஜெண்ட் படம் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக  திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தில் நாயகன் அகில் ஒரு அதிரடி வீரனாக உளவாளி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாப்பாத்திரத்திற்காக அவர் தன்னை உருமாற்றிக்கொண்ட விதம் நம்மை வியக்க வைக்கிறது. இப்படத்தின் வெளியீட்டு குறித்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில் அகில் கோட் சூட்டுடன் ஒரு நவீன, ஸ்டைலான ஏஜென்டாக நின்று கொண்டிருப்பது, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியுள்ளது.

Nagarjuna Son akhil akkineni Agent release update

டீசரில் காட்டப்பட்ட அகிலின் அதிரடி ஆக்சன் பாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அட்டகாசமான டீசரை அடுத்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு  பெருமளவில் அதிகரித்துள்ளது.  அகிலின் காதலியாக சாக்‌ஷி வைத்யா நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ரசூல் எல்லோர், ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி வழங்கியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பாளராகவும், அவினாஷ் கொல்லா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

Nagarjuna Son akhil akkineni Agent release update

ராமபிரம்மம் சுங்கரா தயாரிப்பில்  சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இப்படத்தை அஜய் சுங்கரா, பதி தீபா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ், சுரேந்தர் 2 சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பு: சதீஷ் குமார் - சிவா (AIM)

Also Read | பிரபல இளம் நடிகரின் தயாரிப்பில் அஞ்சலி நடித்துள்ள வெப் சீரிஸ்.. ரிலீஸ் எப்போ.? எதுல?

Nagarjuna Son akhil akkineni Agent release update

People looking for online information on Akhil Akkineni will find this news story useful.