'நாதஸ்வரம்' சீரியல் ஹீரோயின் ஸ்ரித்திகா திருமணம் - வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 02, 2020 01:16 PM
'மதுரை - தேனி வழி ஆண்டிப்பட்டி' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருத்திகா. அதனைத் தொடர்ந்து 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'நாதஸ்வரம்' தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர், 'கல்யாண பரிசு', 'என் இனிய தோழியே', 'குல தெய்வம்' உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரித்திகா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது திருமண வீடியோவை பகிர்ந்த அவர், இனி நான் அதிகாரப்பூர்வமாக திருமதி ஸ்ரித்திகா சநீஷ் என்று தெரிவித்துள்ளார்.