www.garudabazaar.com
iTechUS

"கூடவே இருந்து இப்படி பண்ணிட்டானே-னு தோணுச்சு😂".. சக போட்டியாளர் பற்றி மைனா நந்தினி ஜாலி Talk..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் ஆறாவது சீசனில் இறுதிவரை முன்னேறிய சின்னத்திரை நடிகை மைனா நந்தினி தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து நம்முடைய சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.

Myna Nandhini Exclusive about Manikanta Rajesh in BB6

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. ஆரம்பம் முதலே பல டாஸ்க்குகளில் வெற்றி பெற்று சக போட்டியாளர்களுக்கு கடுமையாக டஃப் கொடுத்தவர் மைனா. இறுதி வாரத்தில் அசீம், விக்ரமன், ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அப்போது மிட் வீக் எவிக்ஷன் மூலமாக மைனா போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் சோகமடைந்தனர்.

Myna Nandhini Exclusive about Manikanta Rajesh in BB6

Image Credit : Vijay Televison

இந்நிலையில் தன்னுடைய பிக் பாஸ் அனுபவங்கள் குறித்து நம்முடைய சேனலுக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார் மைனா. அப்போது மணிகண்ட ராஜேஷ் தனக்கு ஃபேவரைட்-ஆக நடந்து கொண்டது குறித்து பலரும் பேசி வருவதாக தெரிவித்தார்.

Myna Nandhini Exclusive about Manikanta Rajesh in BB6

இது குறித்து அவர் பேசுகையில், "உண்மையிலேயே அன்று நான் மாதவிடாய் சிக்கலை சந்தித்தேன். டிரிப்ஸ் போடும் அளவிற்கு உடல்நிலை சென்று விட்டது. அடுத்த நாள் அந்த டாஸ்க் நடைபெற்றது. மணி அம்மா, மனைவி, தங்கை ஆகியோரின் வலிகளை அருகில் இருந்து பார்த்தவன். அதனால் ஒரு தோழி என்ற முறையில் எனக்காக அவன் விட்டு கொடுத்தான். ஆனால், இது ஒளிபரப்பாகவில்லை. அப்படி ஒன்னு நடந்ததே பலருக்கும் தெரியாது. ஆனால் நான் கமல் சார்கிட்டயே இத சொல்லியிருந்தேன். மற்றபடி ஃபேவரைட்-னு ஏதுமில்லை. ஆரம்பத்தில் போட்டியில் அவன் செய்த பிழைகள் எதுவும் எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் நாளடைவில் அவருடைய போட்டியின் விதமே மாறியது. அப்போது நான் அவனை நாமினேட் செய்தேன். அதேபோல அவனும் என்னை நாமினேட் செய்ய தொடங்கினான். கூடவே இருந்தியே செவ்வாழை கடைசில இப்படி பண்ணிட்டியே என்று தோன்றியது" என்றார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Myna Nandhini Exclusive about Manikanta Rajesh in BB6

People looking for online information on Biggboss6Tamil, Myna Nandhini will find this news story useful.