''நிறைய ஏழைகளும் இருக்காங்க.. அவங்களுக்காக இதை பண்ணுங்க'' - விஜய் ஆண்டனி வேண்டுகோள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதுகாப்பு விஜய் ஆண்டனி கருத்து | music director and actor vijay antony opens on coronavirus safety issue

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து இவர் பிரபலமானார். இதையடுத்து நான் படத்தின் மூலம் இவர் ஹீரோவானார். சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். 

இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மனிதனால் எதை வேண்டுமானாலும் சாதித்த விட முடியும் என நினைத்தோம், ஆனால் ஒரு வைரஸ் நம்மை வீட்டுக்குள் முடங்க வைத்துவிட்டது. பணமின்றி தேவையான பொருட்கள் கூட வாங்க முடியாத ஏழைகளும் இருக்கிறார்கள். வீட்டில் உங்களுக்கு ஏதாவது தேவையற்ற பொருள் இருந்தால், அதை ரொட்டில் வைத்து விடுங்க. தேவைப்படுபவர்கள் எடுத்து கொள்ளட்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor