ET Others
www.garudabazaar.com

மொரட்டு சிங்கிள் கேங்கில் சிம்புவா? பிரேம்ஜி பகிர்ந்த செம வைரல் மீம்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரேம்ஜி அமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ள மீம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

Morattu single Premji amarean shared a meme

VIDEO: சினிமாவாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு! வெளியான சூப்பர் டிரெய்லர்!

மொரட்டு சிங்கிள் பிரேம்ஜி

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் வலம் வருபவர் பிரேம்ஜி அமரன். பல படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக எல்லா படங்களிலும் பிரேம்ஜி நடித்து விடுவார். 42 வயதாகும் பிரேம்ஜி அமரன் இதுவரை திருமணம் செய்யாமல் செம ஜாலியாக, முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் காதலில் விழுந்துள்ளதாக செய்தி பரவ அதை மறுத்து ‘நான் எப்போதுமே மொரட்டு சிங்கிள்தான்’ என்று கூறியிருந்தார்.

சமூகவலைதளங்களில் குறும்பு

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரேம்ஜி அமரன் பல நகைச்சுவையான ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்து வருபவர். இதற்கென்றே அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல மற்றவர்களின் பதிவுகளிலும் சென்று குறும்பாக ஏதாவது கமெண்ட் போட்டுவிட்டு வருவார். அப்படி இன்று அவர் பகிர்ந்துள்ள மீம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

Morattu single Premji amarean shared a meme

சிம்புவுடனான நட்பு

நடிகர் சிம்பு பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். இசைத்துறையில் இருந்த பிரேம்ஜியை நடிகராக்கியதே சிம்புதான். தன்னுடைய வல்லவன் படத்தில் பிரேம்ஜியை நடிகராக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு சென்னை 28-ல் அவர் கவனிக்கப்பட்டு பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவ்வப்போது சிம்பு உடனான தன்னுடைய நட்பு குறித்து புகைப்படங்களோ அல்லது ஸ்டேட்டஸோ பகிர்ந்து வருவார். சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் கூட சிம்புவோடு நடித்திருந்தார். பிரேம்ஜியை போலவே சிம்புவும் இப்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

Morattu single Premji amarean shared a meme

கவனத்தை ஈர்த்த மீம்ஸ்

இந்நிலையில் இன்று பிரேம்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த ஒரு மீம் கவனத்தை ஈர்த்துள்ளது. யாரோ ஒரு ரசிகர் உருவாக்கி இருந்த மீமில் ‘இன்னும்  5 ஆண்டுகள் கழித்து எல்லோரும் திருமணம் செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால் நான், சிம்பு மற்றும் பிரேம்ஜி ஆகிய மூவர் மட்டுமே சிங்கிளாக இருப்போம்’ என்று உருவாக்கி இருக்கிறார். அந்த மீமை பகிர்ந்த பிரேம்ஜி அதை சிலம்பரசனுக்கு டேக்கும் செய்துள்ளார். இந்த மீம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Morattu single Premji amarean shared a meme

பாலிவுட் நடிகருடன்.. அரபிக்குத்து டான்ஸ் போட்ட 'தளபதி 66' நடிகை.. மூவ்மென்ட்ஸ் சும்மா அள்ளுது

தொடர்புடைய இணைப்புகள்

Morattu single Premji amarean shared a meme

People looking for online information on சிம்பு, பிரேம்ஜி, பிரேம்ஜி அமரன், Morattu single, Premji, Premji amarean, Silambarasan will find this news story useful.