www.garudabazaar.com
www.garudabazaar.com

'ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!'.. திரிஷ்யம்-2 ரீமேக் பற்றி இயக்குநர் பகிர்ந்த முக்கிய அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் தொடர்ச்சியாக திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது அமேசான் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகியுள்ளது.

Mohanlan Drishyam2 Telugu remake shoot venkatesh திரிஷ்யம் 2

தமிழில் திரிஷ்யம் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் வெளியானது. இதேபோல் திரிஷ்யம் 2-ஆம் பாகம் எடுக்கும் திட்டம் இல்லை என கமல்ஹாசன் தரப்பில் இருந்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் 2-ஆம் பாகம் தெலுங்கில் உருவாகவுள்ளது. அப்படத்துக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் ஒரு போட்டோவுடன் பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவில் ஜீத்து ஜோசப்புடன் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபாட்டி நிற்பதை காண முடிகிறது.

Telungu remake of Drishyam 2 is on . Starting in March.

Posted by Jeethu Joseph on Saturday, 20 February 2021

திரிஷ்யம் முதல் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ், மீனா, நதியா மற்றும் பலர் நடித்தனர். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்திலும் வெங்கடேஷ் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக ஜீத்து ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: “லால் ஏட்டா.. திரிஷ்யம் - 3 வருமா?”.. ட்விட்டரில் ‘மோகன்லால்’ அளித்த வைரல் பதில்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlan Drishyam2 Telugu remake shoot venkatesh திரிஷ்யம் 2

People looking for online information on Drish, Drishyam, Drishyam 2, Kamal Haasan, Papanasam, Venkatesh will find this news story useful.