www.garudabazaar.com
www.garudabazaar.com

“லால் ஏட்டா.. திரிஷ்யம்-3 வருமா?”.. ட்விட்டரில் ‘மோகன்லால்’ அளித்த வைரல் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மலையாளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'.

Drishyam 3 kanumo laletta mohanlal replies திரிஷ்யம்-3

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த த்ரில்லர் படம் தமிழில் பாபநாசம் என்கிற பெயரிலும் பின்னர் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் நடித்தனர்.

இந்நிலையில் 'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம், அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் மோகன்லால் தமது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார்.

அதில் ஒருவர், “லால் ஏட்டா(லால் அண்ணா) திரிஷ்யம் 3-ஆம் பாகம் காணக் கிடைக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு மோகன்லால், “முதல்ல நீங்க திரிஷ்யம் 2-ஆம் பாகத்தை பாருங்க... பாக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் குடும்பத்துடன் அமேசான் ப்ரைமில் திரிஷ்யம்-2 பார்ப்பதாகவும் மோகன்லால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதேபோல் தமிழில் பாபநாசம் 2 ரீமேக் செய்வது குறித்து பேசிய இயக்குனர் ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம் 2வின் வெற்றியை பொறுத்துதான் கமல்ஹாசன் சார் இந்த முடிவை எடுக்க வேண்டும். அதுபற்றி யோசிப்பார் என நினைக்கிறேன். அவரது அழைப்புக்காக தான் நானும் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக Behindwoodsலிருந்து விசாரித்தபோது, “பாபநாசம்-2 எடுப்பதற்கான திட்டம் இல்லை” என்று திட்டவட்டமாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து தகவல் கிடைத்தது.

ALSO READ: திரிஷ்யம்-2 திரை விமர்சனம் Drishyam-2 (Tamil) Review

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Drishyam 3 kanumo laletta mohanlal replies திரிஷ்யம்-3

People looking for online information on Drishyam, Drishyam 2, Drishyam 2 Tamil, Drishyam Tamil, Meena, Mohanlal will find this news story useful.