பிரமாண்டத்தின் உச்சக்கட்டம் - மிரட்டும் மரைக்காயர் பட ட்ரெய்லர்.! போருக்கு மோகன்லால் ரெடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மோகன்லாலின் மரைக்காயர் படத்தின் ட்ரெய்லர் | mohanlal keerthy suresh arjun prabhu starring maraikkayar trailer is out

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம். இத்திரைப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். இதில் கல்யாணி ப்ரியதர்ஷன், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் மரைக்காயர் படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மரைக்காயர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மிக பிரமாண்டமாக இந்த ட்ரெய்லர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களை எதிர்த்து போரிடும் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். வரும் மார்ச் 26 முதல் இத்திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை கலைப்புலி தானு தமிழில் வெளியிடுகிறார்.

பிரமாண்டத்தின் உச்சக்கட்டம் - மிரட்டும் மரைக்காயர் பட ட்ரெய்லர்.! போருக்கு மோகன்லால் ரெடி. வீடியோ

Entertainment sub editor