www.garudabazaar.com

திருஷ்யம் வெற்றிக் கூட்டணியின் அடுத்த த்ரில்லர் on the way…. வெளியானது மிரட்டலான ’12th MAN’ டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமான 12th man டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

Mohanlal jeethu joseph 12th man teaser released

Also Read | ”Mental Breakdown-க்கு பக்கத்தில் இருக்கேன்”… “அவர் இருந்தா நல்லா இருக்கும்”… emotion ஆன ஷகீலா மகள் மிளா!

மோகன்லால் ஜீத்து ஜோசப் கூட்டணி…

திருஷ்யம் மற்றும் திருஷ்யம் 2 ஆகிய படங்களின் வெற்றிப்படங்களைக் கொடுத்த மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் கூட்டணி, மலையாள சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கூட்டணியாக உருவாகியுள்ளது. .  இவர்கள் கூட்டணியில் உருவான திருஷ்யம் மற்றும் திருஷ்யம் 2 படங்கள் இந்தியாவில் உள்ள முக்கியமான மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த பிளாக்பஸ்டர் ’ஹீரோ – டைரக்டர்’ கூட்டணி மீண்டும் 12th MAN என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

Mohanlal jeethu joseph 12th man teaser released

இந்த படம் சம்மந்தமாக வெளியான முதல் லுக் போஸ்டரே கவனத்தை ஈர்த்தது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில், ஒரு கல் வீட்டின் பின்னணியில் மோகன்லாலின் நிழல் இடம்பெற்றுள்ளது. த்ரிஷ்யம் படத்தை தயாரித்த ஆஷிர்வாத் சினிமாஸின் கீழ், ஆண்டனி பெரும்பவூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Mohanlal jeethu joseph 12th man teaser released

ஓடிடி வெளியீடு…

மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் இணைந்தாலே வெற்றிதான் என்ற நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்துள்ள இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளனர் படக்குழுவினர். இது சம்மந்தமான போஸ்டரை சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டு விரைவில் ரிலீஸ் என்று அறிவித்துள்ளது. திருஷ்ய்ம் 2 திரைப்படமும் இதுபோல ஓடிடியில்தான் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohanlal jeethu joseph 12th man teaser released

வெளியான டீசர்…

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வேகமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தது போலவே ஒரு திரில்லர் படமாகவே 12th Man இருக்கும் என்பதை இந்த டீசர் காட்டுகிறது. டீசரில் அழகாவும், சஸ்பென்ஸோடும் பல காட்சிகள் காட்டப்படும் நிலையில் இடையே “ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு. ஒரு பொது வாழ்க்கை, ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, ஒரு ரகசிய வாழ்க்கை” என்ற வாக்கியங்கள் இடம்பெறுகின்றன. டீசரின் இறுதியில் மோகன்லால் இடம்பெறுகிறார்.

Mohanlal jeethu joseph 12th man teaser released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

திருஷ்யம் வெற்றிக் கூட்டணியின் அடுத்த த்ரில்லர் ON THE WAY…. வெளியானது மிரட்டலான ’12TH MAN’ டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal jeethu joseph 12th man teaser released

People looking for online information on 12th man teaser, Jeethu Joseph, Mohanlal will find this news story useful.