www.garudabazaar.com

கெத்தா பார்க்க 'ஹேண்ட்ஸமா' இருக்காரு யாரு இவரு?... தேடலை ஆரம்பித்த ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். இதுவரை ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி அர்ஜுனன், சோம், கேப்ரியலா என மொத்தம் 11 போட்டியாளர்கள் உள்ளே சென்று இருக்கின்றனர்.

Model, actor and Martial arts practitioner Som enters the house

இதில் பலரும் விஜய் தொலைக்காட்சி வழியாகவும், படங்களின் வழியாகவும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்களாக இருக்கின்றனர். அதே நேரம் 10-வது போட்டியாளராக உள்ளே வந்த சோம் குறித்து பெரும்பானவர்களுக்கு தெரியவில்லை. இதனால் அவர் யார் என்று தேட ஆரம்பித்து இருக்கின்றனர். அவர் யாரென்பதை இங்கே பார்க்கலாம். முழுப்பெயர் சோமசேகர். மாடலாகவும், நடிகராக இருக்கிறார். அதோடு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலைஞரும் ஆவார். அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

மேடையில் கமல்ஹாசன் முன்பு பேசும்போது, '' கடந்த 10 வருஷமா பெரிய அங்கீகாரம் கிடைக்கல. இந்த நிகழ்ச்சிக்கு பின் நான் என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ள நீண்ட நேரம் தேவைப்படாது என நினைக்கிறேன். ஜாலியாக இருக்க விரும்புகிறேன். இதுவரை சிங்கிள் விரைவில் மிங்கிளாக (Mingle) நான் ரெடி,'' என தெரிவித்து இருக்கிறார். பார்க்க படு ஹேண்ட்சமாக இருக்கும் சோம்க்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன. விரைவில் கண்டிப்பாக சோம்க்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!

Model, actor and Martial arts practitioner Som enters the house

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.