www.garudabazaar.com

பிரபல ஓடிடியில் நவ.24-ல் வெளியாகும் Hawkeye! மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த பிரம்மாண்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெர்மி ரென்னர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், புளோரன்ஸ் பக் மற்றும் பலர் நடித்துள்ள ஹாக்ஐ தொடர்ப்படம் நவம்பர் 24 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

மார்வெல் ஸ்டுடியோஸின் இந்த ஹாக்ஐ தொடர்வரிசைத் திரைப்படம் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவரவுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் புதிய வரவான இத்திரைப்படத்தில் ஜெர்மி ரென்னர் சிறந்த வில்லாளியான ஹாக்ஐயாக தனது குடும்பத்துடன் இணைய முயற்சிக்கிறார். ஆனால் சட்டத்திற்குப் புறம்பானவர்களுடனான அவரது முயற்சிகள் அவரது பயணத்தைத் தடுக்கின்றன.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

அவர்களைத் தோற்கடிக்க, ஹாக்ஐ 22 வயதான திறமையான வில்லாளி மற்றும் அவரது மிகப்பெரிய ரசிகரான கேட் பிஷப்பாக வரும் நடிகர் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்டுடன் இணைந்து, தங்களைச் சுற்றி பிண்ணப்பட்ட குற்றவியல் சதியை உடைக்கிறார்.

ஹாக்ஐ, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவிருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் ஐந்தாவது தொடராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களுக்காக அவரவர்களின்  மொழியிலேயே வெளிவரவுள்ளது.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

ஹாக்ஐயின் நுட்பமான நடிப்பு குறித்து இரண்டு முறை அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் ஜெர்மி ரென்னர் பேசுகையில், “உண்மையான ஆறு அவெஞ்சர்களில் கிளிண்ட் பார்டனும் ஒருவராவார். கிளிண்ட் மற்றும் நடாஷாவைத் தவிர்த்து அனைவரும் சிறப்பு சக்திகளை கொண்டுள்ளனர். அதுவே ஒரு வகையில் ஒவ்வொருவரின் தரத்தையும் நிலைநிறுத்துகிறது. அதன் பிறகு அவருக்கு ஒரு குடும்பம் உள்ளது என்பதையும் பல அம்புகளை மாற்றுவார் எனும் உண்மையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

ஒரு சூப்பர் ஹீரோ எப்படி இருக்க வேண்டும் என்பதை இது மறுவரையறை செய்கிறது என்று நினைக்கிறேன். அவரால் பறக்க முடியாமல் போகலாம் அல்லது சிறப்பு சக்திகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வில்லையுடைய ஒரு நிஜ வாழ்க்கை ஹீரோ ஆவார்” எனக் கூறினார்.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

இயக்குநர்கள் ரைஸ் தாமஸ் மற்றும் பெர்ட் மற்றும் பெர்டி ஆகியோரால் தொலைக்காட்சிக்காக இயக்கப்பட்ட இதில் ஜெர்மி ரென்னர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், வேரா ஃபார்மிகா மற்றும் புளோரன்ஸ் பக் ஆகியோரைக் கொண்ட ஆறு-எபிசோட் தொடரானது நவம்பர் 24 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகவுள்ளது.

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

அதாவது தனது குடும்பத்தைக் காண செல்லும் ஹாக்ஐயின் பயனத்தை 24 நவம்பர் அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Marvel Studios Hawkeye Streaming Hotstar Jeremy Renner

People looking for online information on DisneyHotstar, Hawkeye, HawkeyePremiere, Trending will find this news story useful.