www.garudabazaar.com

நிறைவேறிய தொடர்கனவு…. வடிவேலுவோடு மாரி செல்வராஜின் fanboy தருணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மாரி செல்வராஜ் வைகைப்புயல் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Mariselvaraj fanboy moment with vadivelu sharing a picture

கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  இது சம்மந்தமான தகவல்கள் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தனனுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என கூறியிருந்தார்.

இதனால் இன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்போ, போஸ்டரோ அல்லது வேறு ஏதேனும் அப்டேட்டோ வெளியாகலாம் என்ற யூகங்கள் எழுந்தன .அதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று காலை 10 மணிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Mariselvaraj fanboy moment with vadivelu sharing a picture

வடிவேலுவுக்கு மாமன்னனில் முன்னுரிமை:

இந்த படத்தில் வடிவேலு நடிக்கும் நிலையில் அவருக்கு முன்னுரிமை கொடுத்து மூத்த நடிகர் என்ற முறையில் போஸ்டரில் அவரின் பெயரை முதலில் போட்டு படக்குழுவினர் கௌரவப் படுத்தியுள்ளனர். நடிகர் வடிவேலு, சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் தயாராகி வரும் நிலையில், அதன் பிறகு வடிவேலு ஒப்புக்கொண்ட இரண்டாவது படமாக மாரி செல்வராஜின் மாமன்னன் படம் அமைந்துள்ளது.  இப்படி சில ஆண்டுகளாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ‘மாமன்னன்’ பட அறிவிப்பு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Mariselvaraj fanboy moment with vadivelu sharing a picture

வடிவேலுவுடன் மாரி செல்வராஜ்:

படத்தின் போஸ்டரும் தலைப்பும் வெளியாகி ஒரு புறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று மாலை இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ‘நிறைவேறிய ஒரு தொடர் கனவு மாமன்னனில் வைகைபுயல் ‘ எனக் கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவுக்கு இன்றைய இளம் இயக்குனர் பலரும் ரசிகர்களாக உள்ளனர். சமீபத்தில் கமலுக்கு நடந்த பாராட்டு விழாவில் வடிவேலு பேசும்போது அதை முதல் வரிசையில் அமர்ந்திருந்த மாரி செல்வராஜ் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார். அந்த வகையில் இன்று அவரை நேரில் பார்த்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவருடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mariselvaraj fanboy moment with vadivelu sharing a picture

People looking for online information on MariSelvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.