www.garudabazaar.com

வடிவேலுவுக்கு ஜோடியான கையோடு ஷிவானி பதிவிட்ட வைரல் போட்டோ! தலைவனை பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வைகைப்புயல் வடிவேலு உடன் ஷிவானி நாராயணன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

shivani narayanan meets vadivelu for naai sekar returns

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

shivani narayanan meets vadivelu for naai sekar returns

இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கிறார். இன்று வடிவேலுவுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷிவானி நாராயணன், "எனது மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை அவரது படங்களுடன் பார்ப்பதில் இருந்து அவருடன் திரை இடத்தை பகிர்ந்து கொள்வது வரை. பழம்பெரும் நடிகர் வடிவேலு, லைக்காவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ்க்காக இணைந்ததில் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.

shivani narayanan meets vadivelu for naai sekar returns

R J பாலாஜி இயக்கி நடிக்கும் புதிய படத்திலும் நடிகை ஷிவானி நடிக்க உள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஷிவானி VJS46 படத்தில் ஷிவானி விஜய் சேதுபதியுடன் போலிசாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் முன்பே நடிகை ஷிவானி நடித்து முடித்துள்ளார். 

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

shivani narayanan meets vadivelu for naai sekar returns

 

இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். சமீபத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகின.

'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும்,  அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்ற படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றது. 

தொடர்புடைய இணைப்புகள்

shivani narayanan meets vadivelu for naai sekar returns

People looking for online information on Lyca, Naai Sekar, Naai Sekar Returns, Shivani Narayanan, Vadivelu will find this news story useful.