RRR Others USA

மன்மத லீலை ரிலீஸ் தாமதம்: "கடவுள் இருக்கார்".. வெங்கட் பிரபு பாணியில் தயாரிப்பாளர் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள மன்மதலீலை திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக தாமதமாகியுள்ளது.

Manmatha leelai technical problemmatinee show delay

BBultimate: "ஐயோ நான் அந்த மாதிரி சொல்லல".. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட போட்டியாளர்!

மாநாடுக்குப் பின் மன்மதலீலை…

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட்  மற்றும் ஜெயப்பிரகாஷ்  உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Manmatha leelai technical problemmatinee show delay

கில்மா படம் கிடையாது…

இந்த படம் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு ‘கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என நினைத்த போது என் உதவியாளர் மணிவண்ணனின் இந்தக் கதை வந்தது. அருமையான கதை. அசோக்கை சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி’ என ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

டீசர், டிரைலர், ஸ்னீக் பீக்…

இந்த படம் சம்மந்தமாக இதுவரை வெளியான போஸ்டர்கள் அனைத்தும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதுபோலவே இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் சமீபத்தில் வெளியான ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

Manmatha leelai technical problemmatinee show delay

ரிலீஸீல் திடீர் மாற்றம்…

இந்நிலையில் இன்று இந்த படம் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தற்போது பகிர்ந்துள்ள டிவீட் வைரலாகி வருகிறது. அந்த டிவீட்டில் ‘கடவுள் இருக்கிறார்… சில தொழில்நுட்பப் பிரச்சனைகளால் மன்மத லீலை திரைப்படம் சிறிது தாமதம். மேட்னி காட்சியில் இருந்து பார்த்து ரசியுங்கள்...KDM (திரையரங்கங்களுக்கு கொடுக்கப்படும் சங்கேத குறியீடு) விரைவில் திரையரங்குகளை அடையும்’ எனக் கூறியுள்ளார்.  முன்னதாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம் ரிலீஸுக்கு முதல்நாள் பிரச்சனைகளை சந்தித்தபோது வெங்கட் பிரபு இதே போல ‘கடவுள் இருக்கார்’ என டிவீட் செய்ய அது வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

”என்ன ஆனாலும் சரி…” வியர்வை வழிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் viral pic!

தொடர்புடைய இணைப்புகள்

Manmatha leelai technical problemmatinee show delay

People looking for online information on Ashok Selvan, Manmatha Leelai, Premgi Amaren, Samyukta Hegde, Venkat Prabhu will find this news story useful.