COBRA D Logo Top
www.garudabazaar.com

இமயமலையில் சாகச பைக் RIDE.. அஜித்துடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாருடன் பிரபல நடிகை இமயமலை பைக் சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளார்.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

Also Read | "ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு".. மனம் திறந்த Ponniyin Selvan பட நடிகை!

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

தற்போது அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

இந்நிலையில் இந்த பைக் சுற்றுப்பயணத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்ரஜ் வெங்கட் பகிர்ந்துள்ளார். இமயமலையில் உள்ள கர்டூங்களா பகுதியில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

தற்போது நடிகை மஞ்சு வாரியர் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து ஏகே61 படத்தில் நடித்து வருகிறார்.‌

Also Read | "தமிழ் சினிமால இந்த 4 இயக்குனர்களோட படத்துல நடிக்கனும்".. பிரபல பொன்னியின் செல்வன் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Bike Ride with Ajithkumar at Ladakh Leh

People looking for online information on Ajith Kumar, Ladakh Leh, Manju Warrier, Manju Warrier Bike Ride, Manju Warrier Bike Ride with Ajithkumar will find this news story useful.