சரவணன் மீனாட்சி, ப்ரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினி என்னும் பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

அதிகமான ரசிகர்களை கொண்ட இவர் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது 'நானும் ரவுடி தான்' என்ற பாடலுக்கு வாயசைத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.
Tags : Mayna nandhini