'ஜோடி நம்பர் 1.. அசத்தல் நடிகர்... அடுத்த கட்டத்திற்கு நகரும்... இளம் ஹீரோ மகேஷ் சுப்பிரமணியம்!
முகப்பு > சினிமா செய்திகள்சின்னத்திரையில் தற்போது பிசியான நடிகராக கலக்கி வருபவர் மகேஷ் சுப்பிரமணியம்.

ஃபிட்டான ஜிம்பாடி, முறையாக நடனம் பயின்றவர், ஹீரோவுக்கு ஏற்ற உயரம் என ரசிகர்களின் லைக்ஸை குவித்து வரும் இவர் தனது கலைப்பயணத்தை ஆரம்பித்தது, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக... 'திரையரங்கம்' என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஒரு பிரபல தொலைக்காட்சியில்!
நடனத்தில் இவருக்கு கிடைத்த பயிற்சி, இவரை மெல்ல ரியாலிட்டி ஷோக்கள் பக்கம் திருப்பியது. விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 9-ல் இவர் நடிகை ரீமா அஷோக்குடன் ஜோடி சேர்ந்து ஆடி, ரசிகர்களை கவனிக்க வைத்தார். இதை தொடர்ந்து பகல் நிலவு என்ற சீரியலில் நெகட்டீவ் வேடத்தில் வந்து மாஸ் காட்டியவர், அடுத்ததாக ஜோடி போட்டது யாருடன் தெரியுமா.??
இப்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, உலக அளவில் பிரபலமாகியுள்ள ஷிவானி நாராயணனுடன் தான். கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் இவர் ஷிவானிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியலில் தேவயாணியின் தம்பியாக நடித்து, தமிழகத்தின் மூளை முடுக்குகள் எல்லாம் பிரபலமானார் மகேஷ்.
தற்போது அடுத்தடுத்து ப்ராஜக்ட்டுகளுடன் கலைத்துறையில் மிக வேகமாக பயணித்து வருகிறார்.., ஆம், இப்போது, சினிமா வாய்ப்புகளை நோக்கி பிசியாக நகர தொடங்கியிருக்கிறார், மகேஷ். சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்தவர், விரைவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று, நிச்சயம் வெள்ளித்திரையில் கலக்க போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'ஜோடி நம்பர் 1.. அசத்தல் நடிகர்... அடுத்த கட்டத்திற்கு நகரும்... இளம் ஹீரோ மகேஷ் சுப்பிரமணியம்! வீடியோ