www.garudabazaar.com

"மதுர வீரன் தானே!".. சந்தானத்துடன் முதல்முறையாக மதுரை முத்து! அசத்தலான டிரைலர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தான, ஹீரோவாக தொடர்ந்து பல காமெடி ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

அந்த வகையில், சந்தானத்தின் நடிப்பில், காமெடி-குடும்ப சென்டிமென்ட் - காமெடி கலந்து உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை, ஆர்.ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார்.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

படத்தில், சரிவர பேசமுடியாத (திக்கு வாய்) நபராக முதல் முறையாக சந்தானம் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு குறித்து காட்டப்படுவதுடன், இப்படத்தில் சந்தானத்தின் நடிப்பு மிகவும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள  ‘சபாபதி’ படத்தில் சந்தானத்தின் தந்தைய்ஹாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். 

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

மேலும் படத்தில் பிரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

படத்தின் ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார். பேண்ட்ட்சி காமெடி வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் நவம்பர் 19-ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.  இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி கைப்பற்றியுள்ளது.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

இந்நிலையில் இப்படத்தில், சந்தானத்துடன் மதுரைமுத்து பேசக்கூடிய காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றிருக்கின்றன.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

தமிழ்ச் சமூகத்தில் மிக முக்கியமான ரியாலிட்டி நகைச்சுவையாளராக பரவலாக அறியப்படும் மதுரை முத்து விஜய் டிவி கலக்கப்போவது யாரு, அதற்கு முன்னதாக சன் டிவி அசத்தப்போவது யாரு என சின்னத்திரைகளில் ரியாலிட்டி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதுடன், உலகெங்கும் தமிழ்பட்டி மன்றங்களை நடத்தி புகழ் பெற்றவர்.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

இந்நிலையில், தனக்கு நல்ல குணமான பெண் தான் மணப்பெண்ணாக வரவேண்டும் என்று சந்தானம் கேட்க, அதற்கு பதிலளிக்கும் மதுரை முத்து, “கொரோனோவில் இருந்து குணமான பெண் இருக்கிறார் ஓகேவா?” என்று கேட்கும் காட்சிகள் சபாபதி படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

மதுரை முத்து தனக்கே உரிய நகைச்சுவை கவுண்டர்களாலும், பட்டிமன்றங்களில் கலகலவென பேசும் பேச்சாலும் அனைவரையும் கவரக்கூடியவர்.

இந்நிலையில் சபாபதி படத்திலும் அவ்வாறே நடித்துள்ளார் என்பது இந்த காட்சியில் இருந்து தெரியவருவதாக அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Madurai Muthu in Santhanam Sabhaapathy viral scene trailer

People looking for online information on Madurai Muthu, Sabhaapathy Tamil, Santhanam will find this news story useful.