Udanprape others
www.garudabazaar.com

LATEST: சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் சூப்பரான First Look Poster! படத்துக்கு பேரு என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிப்பில் கடைசியாக டிக்கிலோனா படம் ஜீ5  ஒடிடியில் செப்டம்பர் 10 அன்று வெளியானது.

LATEST Super update of Telugu remake movie starring Santhanam!

அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.

LATEST Super update of Telugu remake movie starring Santhanam!

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் (27.08.2021) அன்று நிறைவு பெற்றது. இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார்.

LATEST Super update of Telugu remake movie starring Santhanam!

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு இன்று (15.10.2021) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ஏஜண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

LATEST Super update of Telugu remake movie starring Santhanam!

Tags : Santhanam

தொடர்புடைய இணைப்புகள்

LATEST Super update of Telugu remake movie starring Santhanam!

People looking for online information on Santhanam will find this news story useful.