VIRAL : யாரு நம்ம 'மேடி'யா இது..? ...சத்தியமா நம்ப மாட்டீங்க... வைரலாகும் டீன் ஏஜ் போட்டோ..!!
முகப்பு > சினிமா செய்திகள்அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி தமிழ்நாட்டு இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியவர் நடிகர் மாதவன். இவர் நடித்த பல படங்களும் ஹிட் அடித்தது.வெகு விரைவிலேயே அவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்தார்.

அவர் தனது காதலியான சரிதா மாதவனை துணைவியாக கைபிடித்தார். தற்போது அவர் சமூக வலைதளத்தில் தான் காதலித்த சமயத்தில் சரிதாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது. போட்டோவில் இருவரும் பார்க்க மிகவும் இளம் வயதில் இருக்கின்றனர். அதற்கு மேலே அவர் "இப்போது எங்களுக்கு தெரிவது... எனக்கு அப்போவே தெரியும்" என்று கூறியுள்ளார்.
தற்சமயம் மாதவன் ISRO விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் 17 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனுஷ்காவுடன் அவர் நடித்திருக்கும் படத்திற்கு 'சைலன்ஸ' என்று பெயரிடப்பட்டுள்ளது.