www.garudabazaar.com

BREAKING: 'மாநாடு' தெலுங்கு ரீமேக்.. முக்கிய ரோலில் இரண்டு முன்னணி ஸ்டார் நடிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் மாநாடு, கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது.

Maanaadu Movie Telugu Remake Ravi Teja Rana Daggubatti Doing Lead Roles

Also Read | BREAKING: சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்.. இயக்குனர் இவரா? போடு வெடிய

2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு. 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க,  V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய் ஜி மகேந்திரா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Maanaadu Movie Telugu Remake Ravi Teja Rana Daggubatti Doing Lead Roles

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபல விமர்சகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.  ரசிகர்க்ள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது.

Maanaadu Movie Telugu Remake Ravi Teja Rana Daggubatti Doing Lead Roles

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன், ஷங்கர், அல்போன்ஸ் புத்ரன் ஆகியோர் படத்தை பாராட்டியிருந்தனர். மாநாடு படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. மாநாடு படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

Maanaadu Movie Telugu Remake Ravi Teja Rana Daggubatti Doing Lead Roles

இந்நிலையில், மாநாடு படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் ரவி தேஜா &  ராணா டகுபாடி நடிக்க உள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தேரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் சிபிராஜ், ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படம்.. தெறி அப்டேட்!

Maanaadu Movie Telugu Remake Ravi Teja Rana Daggubatti Doing Lead Roles

People looking for online information on Maanaadu Movie, Maanaadu Movie Telugu Remake, Rana Daggubatti, Ravi Teja will find this news story useful.