www.garudabazaar.com

"எம்ஜிஆர் படங்கள் முதல் இம்சை அரசன் 23ம் புலிகேசி வரை" ... பாடலாசிரியர் புலமைப்பித்தன் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியர் புலமைப்பித்தன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

lyricist pulamaipithan passed away புலமைப்பித்தன் காலமானார்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவருமான நடிகர் எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக எழுதிய ‘சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்கிற பாடலை எழுதி புகழ்பெற்றார் புலமைப்பித்தன்.

இதேபோல் ‘நான் யார்.. நான் யார்..’ பாடல், ‘ஓடி ஓடி உழைக்கணும்’.. ‘ஆயிரம் நிலவே வா..’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய புலவர் புலமைப்பித்தன், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்து வெளியான ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வரையிலும் பல பாடல்களை எழுதியிருக்கிறார்.

lyricist pulamaipithan passed away புலமைப்பித்தன் காலமானார்

அண்மைக்காலமாக அடையாறு Fortis மலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த புலமைப்பித்தன், முன்னாள் அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார்.

அவருக்கு life Support பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக  Fortis மலர் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையினை ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

lyricist pulamaipithan passed away புலமைப்பித்தன் காலமானார்

மருத்துவமனையில் புலமைப்பித்தனின் மனைவி தமிழரசி, பேரன் திலீபன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் தனி செயலாளர் குணசேகரன் மற்றும் பாடலாசிரியர் மதுரா ஆகியோர் உடனிருக்கின்றனர்.

புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு திரைக்கலைஞர்களும், சக கவிஞர்களும், பாடல் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

lyricist pulamaipithan passed away புலமைப்பித்தன் காலமானார்

People looking for online information on Chimbu Deven, Imsai Arasan 23am Pulikecei, Imsai Arasan 24am Pulikecei, Pulamai Pithan, RIPPulamaiPithan, RIPPulamaiPiththan, Vadivelu will find this news story useful.