www.garudabazaar.com

“பவர் ஸ்டார் தான் Tough- குடுப்பாரு”.. ‘எங்க சிரி பாப்போம்’ .. வேற லெவல்.. வெளியான Trailer Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழில் வெளியான பிரபல காமெடி ரியாலிட்டி ஷோ காமிக்ஸ்டான். தமிழில் வழங்கப்பட்ட இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ ஹிட் அடித்தது.

LOL Enga Siri Paappom Trailer OUT amazon Tamil comedy show

இதனைத் தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் அசத்தலான புதிய காமெடி ரியாலிட்டி சீரிஸ் வெளியாகியுள்ளது. மாய எஸ் கிருஷ்ணன், பிரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்.ஜே.விக்னேஷ், சதிஷ், புகழ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், பார்கவ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த ஷோவின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

மிர்ச்சி சிவா மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ சின்னக் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கும் இந்த ஷோவின் பெயர் “LOL: எங்க சிரி பாப்போம்”. இதில் பங்கேற்கும் காமெடியன்கள் சிரிக்க கூடாது. ஆனால் சிரிக்க வைக்கலாம் என்பதுதான் இதன் கான்செப்ட். ஜெயிப்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் உள்ளது. இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ப்ரைமில் ஒளிபரப்பாகிறது.

இவர்களுடன் இதில் காமிக்ஸ்டான் ஷோவில் போட்டியாளர்களாக பங்கேற்ற அபிஷேக் குமார் மற்றும் ஷாமா ஹரினியும் பங்கேற்றுள்ளனர். 6 எபிசோடுகளாக ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியை 16 வயதுக்கு மேற்பட்டோர் கண்டுகளிக்க முடியும்.

“பவர் ஸ்டார் தான் TOUGH- குடுப்பாரு”.. ‘எங்க சிரி பாப்போம்’ .. வேற லெவல்.. வெளியான TRAILER VIDEO! வீடியோ

LOL Enga Siri Paappom Trailer OUT amazon Tamil comedy show

People looking for online information on Mirchi Shiva, Power Star, Premgi, Pugazh, Sathish, Vivekh will find this news story useful.