Reliable Software
www.garudabazaar.com

Video: மகள்களுடன் வாக்களித்த கமல்.. ரசிகர் வேண்டுகோளை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று காலை 7 மணி தொடங்கி ஒரே கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது.

Kamalhaasan Shruthi akshara Sivakarthikeyan voting TN Elections

இதில் பல்வேறு பிரபலங்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் அவரது மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோருடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகைத் தந்து வாக்குப் பதிவினை செய்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் ஆள்காட்டி விரலில் இருக்கும் வாக்களித்த அடையாள மையை காட்டியபடி மூவரும் கையுயர்த்தினர். இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண்கிறது என்பதும், இதையொட்டி வாக்கு சேகரிக்கும் முயற்சியில் அக்‌ஷராஹாசன் வேற லெவலில் மக்கள் நடுவே டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இளம் நடிகர் சிவகார்த்திகேயனும் வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்குச் சாவடியில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க செல்ஃபியும் எடுக்க ஒத்துழைத்தார் சிவகார்த்திகேயன்.

ALSO READ: ரஜினிகாந்த்தின் 'Mass Entry'.. மாஸ்க் அணிந்து ஜனநாயக கடமை ஆற்றினார்.. வீடியோ!

VIDEO: மகள்களுடன் வாக்களித்த கமல்.. ரசிகர் வேண்டுகோளை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhaasan Shruthi akshara Sivakarthikeyan voting TN Elections

People looking for online information on Election2021, Kamal Haasan, Sivakarthikeyan, Tamilnadu election, Voting DayTNElection TNAssemblyElections2021 will find this news story useful.