ET Others
www.garudabazaar.com

”மாசக் கடைசியில இவன்தான் சோறு போடுவான்”… நண்பரோடு லோகேஷ் பகிர்ந்த எமோஷனல் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Content

Lokesh kanagaraj emotional photo with his friend

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

லோகேஷின் அறிமுகம்

யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக குறும்படங்கள் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் முதலில் இயக்கிய மாநகரம் திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்தது.  திறமையான நடிகர்களை வைத்து கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் அந்த படத்தை உருவாக்கி இருந்தார். ஒரு நாள் இரவில் மொத்தக் கதையும் நடப்பது போல அமைக்கப்பட்டு இருந்தது ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியது.

கைதியில் விஸ்வரூபம்

மாநகரத்தின் வெற்றி லோகேஷுக்கு அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.  மாநகரம் போலவே இந்த படத்தையும் சீட் நுனியில் அமரவைக்கும் விதமாக திரைக்கதையை அமைத்திருந்தார் லோகேஷ். கைதி திரைப்படம்,  விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது கைதி. கைதியின் ரிலிஸூக்கு முன்பே அவர் விஜய் நடிக்கும் மாஸ்டர் பட வாய்ப்பைப் பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தில் விஜய் விஜய்சேதுபதி காம்பினேஷன் காட்சிகளை சிறப்பாக உருவாக்கி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் தருணங்களை அளித்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரானார் லோகேஷ்.

Lokesh kanagaraj emotional photo with his friend

கமலுடன் விக்ரம்

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

Lokesh kanagaraj emotional photo with his friend

லோகேஷ் பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.  அந்த புகைப்படத்தில் ஒரு ஹோட்டலில் தன் நண்பருடன் நிற்கும் லோகேஷ் ‘என்னுடைய விருப்பமான உணவகம். 2010 ஆண்டுகளில் மாசக் கடசியில இவன்தான் எனக்கு சோறு போடுவான். ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு நண்பனாக இருப்பதின் அனுகூலம். தேங்ஸ் டா சீனி’ எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Lokesh kanagaraj emotional photo with his friend//www.behindwoods.com/uploads/6228b91b060f9.jpg

 

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh kanagaraj emotional photo with his friend

People looking for online information on Kamal, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.