"சிகரெட் பிடிக்கும் காளியா.?" - சர்ச்சையான first look.. இயக்குநர் லீனா மணிமேகலை விளக்கம்.!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த பெண் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள ‘காளி’ எனும் ஆவணப்பட போஸ்டர், தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அவர் தமது ட்விட்டரில் விளக்கமும் அளித்துள்ளார்.
Also Read | Trend ஆன டிடிஎப் வாசன்.. 2k kids-ன் க்ரஷ் அமலா ஷாஜி.. யாருப்பா இவங்க?
லீனா மணிமேகலை முன்னதாக தேவதைகள், பறை, பலிபீடம் ஆகிய ஆவணப்படங்களை இயக்கியவர். இதேபோல் ‘செங்கடல்’, மாடத்தி உள்ளிட்ட திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளர். இந்நிலையில் அவர் புதிதாக இயக்கியிருக்கும் காளி எனும் ஆவணப்பட போஸ்டரை கடந்த 2-ம் தேதி தனது வெளியிட்டதை அடுத்து இந்த போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் சிகரெட் புகைப்பதாகவும், இன்னொரு கையில் எல்.ஜி.பி.டி. சமூகத்தை பிரதிபலிக்கும் கொடியை ஏந்தி இருப்பதாகவும் போஸ்டர் இருக்கிறது. இதனால் இந்த போஸ்டர் இந்து கடவுளை அவமதிப்பதாகவும், மத நம்பிக்கையை புண்படுத்துவதாகவும் கூறி நெட்டிசன்கள் சிலர் எதிர்மறை விமர்சனங்களை குறிப்பிட்டு "ArrestLeenaManimekalai" என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள லீனா மணிமேகலை, “ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா “arrest leena manimekalai” hashtag போடாம “love you leena manimekalai” hashtag போடுவாங்க.” என்று தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய இன்னொரு பதிவில், "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என்றும் லீனா மணிமேகலை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரி, டெல்லி காவல்துறையிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.
Super thrilled to share the launch of my recent film - today at @AgaKhanMuseum as part of its “Rhythms of Canada”
Link: https://t.co/RAQimMt7Ln
I made this performance doc as a cohort of https://t.co/D5ywx1Y7Wu@YorkuAMPD @TorontoMet @YorkUFGS
Feeling pumped with my CREW❤️ pic.twitter.com/L8LDDnctC9
— Leena Manimekalai (@LeenaManimekali) July 2, 2022
Also Read | "நானும் பாலியல் தொல்லைக்கு ஆளாகிருக்கேன்" - படவிழாவில் ஹீரோயின் பரபரப்பு பேச்சு..!