o2

தியேட்டர்களை திருவிழா ஆக்கிய KGF 2 … இணையத்தில் பாடல்கள் படைத்த சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 

KGF 2 songs In all languages 550 million views

KGF 2 பாடல்கள் இணையத்தில் பெரிய அளவில் சாதனைப் படைத்துள்ளன.

KGF 2 ரிலீஸ்…

கேஜிஎஃப் சாப்டர் 1-க்குக் கிடைத்த வெற்றியை அடுத்து ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.  யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியானது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. திரையரங்குகளில் மொழி வித்தியாசம் இல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடித் தள்ளினர்.

KGF 2 songs In all languages 550 million views

வசூல் சாதனை

கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. ரிலீஸாகி இன்று நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலிம் கணிசமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுபோலவே தமிழ்நாட்டிலும் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதன் மூலம் ‘All time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் கடந்த மே மாதமே ப்ரைம் வீடியோ தளத்தில் Early Rental வசதியோடு கிடைத்தது. இதையடுத்து பின்னர் ப்ரைம் வீடியோவில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

KGF 2பாடல்கள்

இந்த படத்தின் பாடல்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டன. குறிப்பாக Toofan மற்றும் சுல்தானா ஆகிய பாடல்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 550+ மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

KGF 2 songs In all languages 550 million views

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 songs In all languages 550 million views

People looking for online information on Prasanth neel, Yash will find this news story useful.