மீண்டும் அதே கெத்து! ரிலீஸ் தேதி அறிவிப்புடன் போஸ்டர் வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் கே.ஜி.எப். இப்படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சண்டைக் காட்சிகளுக்காக  இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. முதல் பாகத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.  ரவீனா டாண்டன், வடசென்னை படப் புகழ் சரண் சக்தி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்.

KGF 2 ft Yash Sanjay Dutt Raveena Tandon Saran Sakthi

இந்நிலையில் #KGFChapter2 என்ற ஹாஷ்டேக்குடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அக்டோபர் 23-ம் தேதி கே.ஜி.எப் சேப்டர் 2 வெளியாகவிருப்பதாக, இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தகவலை அறிவித்துள்ளனர்.

நெட்டிசன்கள் 2020-ம் ஆண்டின் முக்கிய பட லிஸ்டில் ஏற்கனவே இப்படத்தை இணைத்துள்ள நிலையில், முதல் பாகத்தைப் போலவே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது. முதல் பாகமே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

Entertainment sub editor