"என்னா வெயிலு.. அடுத்த மூனு மாசத்துக்கு.." பிகினி உடையில் கீர்த்தி பாண்டியன் பகிர்ந்த வைரல் PHOTOS..
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை கீர்த்தி பாண்டியனின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

3 Years of Super Deluxe: இயக்குனருக்கு மனதார நன்றி சொன்ன விஜய் சேதுபதி! நெகிழ்ச்சியான தருணம்
நடிகை கீர்த்தி பாண்டியன் இவர் தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.
சில மாதங்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய இரண்டு புகைப்படத்துடன் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். அந்த அறிக்கையில் "ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்மப் பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுது இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சற்று உடலைப் பெருக்குவதற்காக அதிகமாக உணவுகளை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தனக்காக செய்ததாகவும், மற்றவர்கள் முன்னிறுத்தும் பாதுகாப்பின்மையை திருப்திப்படுத்த அல்ல என்றும் கூறினார்.
"நான் முன்பு என்னை நேசித்ததைப் போலவே இப்போது என்னையும் நேசிக்கிறேன், எந்த வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் என்னை நேசிப்பேன்". என கீர்த்திப்பாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் பிகினி போட்டோ சூட் நடத்தியுள்ளார். இந்த பிகினி புகைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நீச்சல் குளத்தில் உள்ளார்.
இந்த போட்டோக்களுக்கு கேப்சனாக வெயில்காலம் தேவையில்லை என்றும், அடுத்த மூன்று மாதம் நீச்சல் குளத்தை விட்டு வெளியே வர முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.
பல வருசத்துக்கு பின் கார்த்திக் - சுகன்யா இணைந்து நடிக்கும் புதிய படம்... வெளியான செம அப்டேட்