VIDEO : "உடல் எடையால் அழுதுக்கிட்டே தூங்கினேன்"!!! வைரலாகும் கீர்த்தி பாண்டியனின் அறிக்கை!
முகப்பு > சினிமா செய்திகள்தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய இரண்டு புகைப்படத்துடன் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் "ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்மப் பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுது இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சற்று உடலைப் பெருக்குவதற்காக அதிகமாக உணவுகளை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தனக்காக செய்ததாகவும், மற்றவர்கள் முன்னிறுத்தும் பாதுகாப்பின்மையை திருப்திப்படுத்த அல்ல என்றும் கூறியுள்ளார்.
"நான் முன்பு என்னை நேசித்ததைப் போலவே இப்போது என்னையும் நேசிக்கிறேன், எந்த வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் என்னை நேசிப்பேன்". என கீர்த்திப்பாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
GOLDWING 🔥#fitness #bodypositivity #youropinionisnotmyresponsbility #selflovealways pic.twitter.com/ETyXVFowns
— Keerthi Pandian (@iKeerthiPandian) August 16, 2021
VIDEO : "உடல் எடையால் அழுதுக்கிட்டே தூங்கினேன்"!!! வைரலாகும் கீர்த்தி பாண்டியனின் அறிக்கை! வீடியோ