மீண்டும் இயக்குநராகும் பிரபல சீரியல் நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 18, 2019 08:13 PM
மேபிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இந்திய சினிமாவின் ஸ்டால்வார்ட்டாக திகழும் பி.லெனின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.

இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட உலகளவில் பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள லெனின், 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஃபிலிம் ஃபெடரேஷனின் தலைவராகவும், ஆஸ்கர் தேர்வு கமிட்டியின் தலைவராகவும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பனோரமாவில் ஒரு பகுதியகாவும் பணியாற்றியுள்ளார்.
லெனின் திரைக்கதை எழுதும் இப்படத்தை இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார்.‘பாரதி’, ‘ஆட்டோகிராப்’, ‘மொழி’, ‘சிவகாசி’, ‘ஊருக்கு நூறுபேர்’, ‘அனந்தபுரத்து வீடு’ என பல திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இ.வி.கணேஷ் பாபு ‘யமுனா’ என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், ‘கட்டில்’ திரைப்படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ‘இளம் தலைமுறையினரை குறிவைக்கும் விதமாக இணைய தலைமுறையை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறினார்.
இப்படத்திற்கு பி.லெனின் திரைக்கதை, கதை மற்றும் வசனத்தை படத்தின் கருவிற்கு ஏற்ப எழுதியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நடிகர்கள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.