அட..! கற்றது தமிழ்ல குட்டி ஆனந்தியா கலக்கிய வெண்பாவா இது.?! - அசர வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கற்றது தமிழ் படத்தில் நடித்த வெண்பா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

கற்றது தமிழ் வெண்பா லேட்டஸ்ட் போட்டோஸ் | katrathu tamil actress venba latest photos

2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கற்றது தமிழ். ராம் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜீவா, அஞ்சலி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்தனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படத்தில் அஞ்சலியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவர் வெண்பா. இவர் பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது போட்டோக்களை பகிர்ந்துள்ளார். பட்டுச்சேலையில் நகையுடன், பாரம்பர்யமாக அவர் எடுத்த போட்டோஷூட் படங்களை அவர் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார். நடிகை வெண்பாவின் இந்த புதிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் ஜி.வி.பிரகாஷுடன் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Entertainment sub editor