பிரபல பின்னணி பாடகி சனா மொய்டுட்டியின் உருவாக்கத்தில் வெளியான ‘கருத்த பெண்ணே’ என்ற மலையாள ராப் பாடல் சமூக வலைதளங்களின் தற்போதைய சென்சேஷனல் பாடலாக வலம் வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூர்யா நடித்த ‘24’ படத்தில் இடம்பெற்ற ‘மெய் நிகரா’ பாடலை பாடியவர் சனா மொய்டுட்டி. மலையாள பாடகியான இவர் ‘மொஹெஞ்சதரோ’, ‘மேரி பியாரி பிந்து’ உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அழகிய பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால்-ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கருத்த பெண்ணே’ என்ற பாடலை ஹிந்துஸ்தானி, பாப், கர்நாடிக் என பல விதமான இசைகளின் கலவையில் சனா பாடி வெளியிட்ட பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வைரல் பாடலை பாடிய சனா மொய்டுட்டி Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில், கருத்த பெண்ணே பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்தும் அது உருவாக்கப்பட்ட நோக்கம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசுகையில், ‘கருத்த பெண்ணே பாடல் மலையாளத்தில் வெளியாகி பின் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடர்பான டிக்டாக் வீடியோ, டிரோல்களை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பாடல் வைரலானாலே டிரோல்கள் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. டிரோலர்ஸ்க்கு எனது நன்றி என சனா கூறினார்.
சில தமிழ் திரைப்பட பாடல்களை பாடிய சனா, ‘கருத்த பெண்ணே’ பாடலை பாடியதுடன், அதற்கு நடனமாடி அசத்தினார். ஆஸ்கர் நயாகன், இசை புயல் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையான சனா, அவரது 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றது குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
“டிரோலர்ஸ்க்கு நன்றி”-‘கருத்த பெண்ணே’ சென்சேஷன் சனா மொய்டுட்டியின் ஸ்பெஷல் வீடியோ வீடியோ