www.garudabazaar.com

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அசத்தும் நடிகர் கார்த்தி... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என்றாலே தல அஜித் தான் பிரபலம். முதன்முறையாக இதை பிரபலப்படுத்தியவரும் அவர்தான் என்று சொல்லலாம். அதன் பிறகு பல பிரபலங்களும் தைரியமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கலக்க துவங்கினார்கள். தளபதி விஜய் கூட 'பிகில்' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து அசத்தினார். அதே பாணியில் பிரபல நடிகர் கார்த்தி தற்போது சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலா ஆகி வருகிறது.

karthi new salt and pepper look photo goes viral

மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கார்த்தி, முதன்முறையாக அமீரின் 'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமானார். இன்று தமிழ் சினிமாவில் சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். கடைசியாக கார்த்தி 'தம்பி' படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு அவர் கைவசம் 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' என இரு படங்கள் இருக்கின்றன. சுல்தான் படத்தின் முதல் போஸ்டரை கடந்த தீபாவளிக்கு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அவருக்கு ஜோடியாக தமிழில் நடிகை ராஷ்மிகா அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்த அசத்தலான சால்ட் அண்ட் பெப்பர் லுக் சுல்தான் படத்திற்கா அல்லது பொன்னியின் செல்வன் படத்திற்காக அல்லது இயல்பாக இருக்க வேண்டும் என்று கெட்டப்பில் வலம் வந்தாரா என்பது இன்னும் தெரியவில்லை.

Tags : Karthi

தொடர்புடைய இணைப்புகள்

karthi new salt and pepper look photo goes viral

People looking for online information on Karthi will find this news story useful.