Jango Others
www.garudabazaar.com

"சொலிட்டு வாங்க!".. பரபரப்பு ட்விஸ்ட்களுடன் 50வது நாள் எலிமினேஷனை அறிவித்த கமல்! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

kamalhassan announced 50th day elimination biggbosstamil5

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் ஒவ்வொரு வாரங்களில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட ஒரு பிரபல போட்டியாளர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவரும் எதிர்பாராமல் அதிரடியாக அபிஷேக் ராஜா ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

அபிஷேக் ரீஎன்ட்ரீ கொடுத்ததால், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று பல ரசிகர்களும் பேசி வந்த நிலையில், பிக்பாஸின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது அதிரடியாக மிக முக்கியமான ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகியிருக்கிறார். முன்னதாக யார் யார் இந்த எலிமினேஷனில் மாட்டாமல் காப்பாற்றப்படுவார்கள் என்று யூகித்துச் சொல்வதற்கு அபிஷேக்கிற்கு கமல்ஹாசன் வாய்ப்பு கொடுத்தார்.

அப்போது அபிஷேக் தாமரை பெயரைச் சொல்ல, அவரைப் பாராட்டிய கமல் ஆனால் காப்பாற்றப்பட்டது சிபி என்று டோஸ் கொடுத்தார். இப்படி இரண்டு டோஸ்கள் அடுத்தடுத்து வாங்கினாலும் அபிஷேக் உண்மையில் அபினய் மற்றும் தாமரை காப்பாற்றப்பட்டதை சரியாகச் சொல்லிவிட்டார். இறுதியில் வெளியேற போகும் அந்த போட்டியாளர் யார் என்கிற பரபரப்புடன் அனைவரும் காத்திருந்தபோது நடிகர் கமல்ஹாசன் இசைவாணி வெளியேறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இசைவாணி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அனைவரிடத்திலும் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அப்போது இடைமறித்த பிக்பாஸ், இசைவாணியிடம் இருக்கும் நிரூப்பின் ஆற்றலுக்கான நாணயத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறச் சொன்னார். அப்போது இசை வாணியை ஹவுஸ்மேட்ஸ் நெருங்கி விடைகொடுத்து அனுப்பும்போது இசைவாணி, “இப்படி எல்லோரும் இங்கு இருக்கும் போதே சந்தோஷமாக பேசிருக்கலாமே?” என்று குறிப்பிட்டதுடன் இறுதியில் ஒரு அசத்தலான கானா பாடலை பாடி, அனைவரையும் வாழ்த்தி, சிரித்த முகத்துடன் வெளியேறினார். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன், இசைவாணி, பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடந்த விஷயங்களை தொகுத்த ஒரு குறும்படத்தை போட்டு காட்டினார்.

அதன் பின்னர் ஹவுஸ் மேட்ஸை அகம் டிவி வழியே பார்த்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட இசைவாணி, இமான் அண்ணாச்சியை பார்த்து அவர்மீது வருத்தம் இல்லை, அதே சமயம் ஆளுமையில் இருக்கும் நபர்களின் பேச்சைக் கேளுங்கள் அது ஒன்று தான் சொல்ல விரும்புவது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் முன்னிலையிலும் ஒரு மோட்டிவேஷன் பாடலை பாடி இசைவாணி இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரியாவிடை பெற்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

kamalhassan announced 50th day elimination biggbosstamil5

People looking for online information on Biggboss elimination, Biggboss5 elimination, Biggboss5elimination, Biggbosstamil elimination, BiggBossTamil5, IsaiVaani, Isaivani, Kamal Haasan, Kamal hassan, KAMALHAASAN, Kamalhassan, Vijay Television, Vijay tv will find this news story useful.