Vikram பட Promotion-க்காக.. ஹிந்தி நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்? வைரல் ஃபோட்டோ.. கூட யாருன்னு பாருங்க..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தான் இயக்கிய முதல் திரைப்படமான 'மாநகரம்' மூலம், பலரது கவனத்தையும் தன் மீது விழ வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

kamalhaasan participated in kapil sharma show for vikram reports

சிறந்த இளம் இயக்குனர் என்னும் பெயர் எடுத்து, இன்னும் நிறைய உச்சங்களைத் தொடுவார் என பலரும் பாராட்டி கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில், மாநகரத்திற்கு பின், கார்த்தியை வைத்து 'கைதி' இயக்கி இருந்த லோகேஷ் கனகராஜ், சிறந்த பிளாக்பாஸ்டர் படத்தையும் கொடுத்தார்.

பாடல்கள் மற்றும் டிரைலர்

தெடர்ந்து, விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் திரைப்படமும், வசூல் வேட்டை நடத்தி பல சாதனைகளையும் படைத்திருந்தது. இதனையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து, விக்ரம் படத்தையும் இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஜூன் 3 ஆம் தேதியன்று, விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனேவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே போல, இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

கமல் - சேதுபதி - பஹத்

இசையமைப்பாளர் அனிருத் முதல் முறையாக கமல்ஹாசன் படத்திற்கு இசையமைத்துள்ளதால், பாடல்கள் மற்றும் பின்னணி இசை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளதால், இந்த புது காம்போவும் படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்தி நிகழ்ச்சியில் கமல்?

இன்னும் ஒரு மாதத்திற்குள் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், ப்ரோமோஷன் வேலைகளிலும் படக்குழு பிசியாக இருந்து வருகிறது. சமீபத்தில், சில ரெயில்கள் மீது விக்ரம் படத்தின் போஸ்டர்கள் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்டிருந்தது. அந்த வகையில், அடுத்ததாக பாலிவுட்டில் ஸ்டான்ட் அப் காமெடியன், நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகம் கொண்ட கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், கபில் ஷர்மாவுடன் அவர் மும்பையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

VIKRAM பட PROMOTION-க்காக.. ஹிந்தி நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்? வைரல் ஃபோட்டோ.. கூட யாருன்னு பாருங்க.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

kamalhaasan participated in kapil sharma show for vikram reports

People looking for online information on Anirudh Ravichander, Fahadh Faasil, Kamal Haasan, Kapil Sharma, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram from June 6, Vikram Movie will find this news story useful.