வீட்டில் விஷேசம்.. உள்ளம் பூரித்து "அந்த நாளுக்காக" காத்திருக்கும் காஜல் அகர்வால்!
முகப்பு > சினிமா செய்திகள்மும்பை: நடிகை காஜல் அகர்வால்-க்கு குழந்தை பிறக்கும் மாதம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல,அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வா நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது.
சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அவகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் திரைப்படங்கள் வெளிவரவில்லை.
திருமணத்துக்கு பின் காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படமான ஹே சினாமிகா படத்தின் காஜல் அகர்வால் கதாபாத்திரத்தின் முதல் லுக் போஸ்டர், முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மலர் விழி எனும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.
ஹீரோவாக துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'ஹே சினாமிகா' படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். இது இவருக்கு அறிமுக படமாகும், துல்கருடன் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின்றனர். இந்த படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் நாள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பின் ஒரே ஒரு புகைப்படம் கர்ப்பமான வயிறுடன் வெளியானது. காஜல் அகர்வால் சமீபத்தில் தனது கர்ப்பமான வயிறு தெரியும் படி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வாழ்த்துடன், வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டுள்ளார். இதை காஜல் அகர்வாலும் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kajal Agarwal Baby Shower Function Photos Went Viral On Instagram
- Pregnant Kajal Aggarwal's Glow In Her Baby-shower Clicks Is Unmissable; Viral
- Hey Sinamika Dulquer Salman Aditi Kajal Romantic Trailer
- Pregnant Kajal Aggarwal Lashes Out At Body-shamers; Here’s What Happened, Viral
- Pregnant Kajal Aggarwal Flaunts Her Baby Bump In Dubai In Viral Picture
- Kajal Aggarwal Baby Bump Photo Went Viral On Instagram
- Kajal Aggarwal Get Get Golden Visa From Dubai Government
- Dulquer Salmaan Kajal Aggarwal New Song Thozhi From Hey Sinamika
- Actress Kajal Agarwal Announce Her Pregnancy Image Went Viral
- Hey Sinamika Movie Kajal Agarwal Character Look Poster Released
- Kajal Aggarwal And Husband Gautham Introduce Their "First Child" To The World; Shares Cute Pics; Viral
- Ramya Krishnan Rare ரம்யா கிருஷ்ணன் வளைகாப்பு Viral Pic
தொடர்புடைய இணைப்புகள்
- "அசிங்கமா பேசாதீங்க, Pregnant Time-ல இப்படி.." கடுப்பான Kajal Aggarwal
- டேய் பார்த்துடா, Baby BUMP-உடன் விளையாடிய KAJAL 😍
- "அஜித்தே"💥 பரோட்டா தவாவில் அமால் டுமால்..! மாஸ்டர் வாசிக்க! AK Fans ஆட! ஒரே கூத்தா இருக்கும்
- Pregnant? அய்யோ! நிறையா பேரு இதையே கேக்குறாங்க... குழப்பத்துக்கு காரணம் இது தாங்க - Aarti Ravi
- அம்மாவாக போகும் Kajal Agarwal... Pregnancy-ஐ அழகாக அறிவித்த கணவர் 🥰🤩❤️
- கர்ப்பமாக இருக்கும் Kajal Aggarwal? 😍 Kutty Kajal Coming Soon போல
- VIDEO: கர்ப்பமாக இருக்கும் KAJAL AGGARWAL? கணவருடன் Airport வந்த Video
- Shalini, Genelia, Kajal அப்பாவா தான் என்ன தெரியும், ஆனா நான்... - Actor Raviprakash Interview
- 🎄 வீடு Full-அ Christmas Trees தான் 🎄 எல்லாருக்கும் Christmas வாழ்த்துக்கள் 😍💞
- யாரும் யாருக்கும் கீழ இல்ல 🔥 Ojas Rajani
- Parents உஷார்! உங்க குழந்தைக்கும் அப்படி நடக்கலாம் | Ojas Rajani
- உங்க உடம்புல எப்போ அந்த Changes-அ உணர்ந்தீங்க? | Ojas Rajani Bold Talk