’எதுக்கு?!’ - ஹீரோவான Jump Cuts ஹரி - வெளியான ரொமான்டிக் சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 29, 2019 08:13 PM
'ஜம்ப் கட்ஸ்’ யூட்யூப் சேனல் மூலம் பிரபலம் அடைந்தவர் ஹரிபாஸ்கர். ஒவ்வொரு வீடியோவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இவர் முதல் முறையாக ’நினைவோ ஒரு பறவை’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி, மிஷா கோஷல், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை ரிதுன் இயக்க மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ், வைட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது மும்முரமாக நடந்துவரும் நிலையில் தமன் இசையமைத்த இப்படத்தின் முதல் சிங்கிளான ’மேனாமினுக்கி’ வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே யூட்யூபில் இருந்து ப்ளாக் ஷீப், ப்ளூ சட்டை மாறன் ஆகியோர் திரைப்படங்களில் பணியாற்ற தொடங்கி விட்ட நிலையில் அந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர்.
’எதுக்கு?!’ - ஹீரோவான JUMP CUTS ஹரி - வெளியான ரொமான்டிக் சாங் இதோ வீடியோ